இரத்த சர்க்கரையை அசுர வேகத்தில் அதிகரிக்கும் மைதா! சுகர் நோயாளி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து
உடலுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும் தானியங்களில் மைதாவும் ஒன்று.
கோதுமையில் இருந்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது.. ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு பிரிக்கப்பட்டு மைதா தயாரிக்கப்படுகின்றது.
கோதுமையில் இருந்து மைதாவாக பிரித்தெடுக்கும்போது மாவு பழுப்புநிறத்தில் இருக்கிறது.
இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க துணிகளின் வெண்மை நிறத்துக்கு பயன்படுத்தும் பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் என கெடுதி தரும் பல இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மைதாவில் உள்ள கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து
குறிப்பாக நீரிழிவு நோயை ஏற்படுத்துவதில் மைதா முக்கிய இடத்தில் உள்ளது.
உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் நீரிழிவும் ஒன்று. அநேகம் பேருக்கு சர்க்கரை நோயை உண்டாக்கிய பெருமை மைதாவையே சேரும்.
மைதாவில் சேர்க்கப்படும் அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் உடலில் இன்சுலின் சுரப்பதைக்கட்டுப்படுத்துகிறது.
இதனால் மைதாவில் தயாரித்த உணவுகள் பிரட், பேக்கரி, பரோட்ட என எதுவாக இருந்தாலும் இதை சாப்பிட்டதும் உடலில் மிகவேகமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் இது போன்ற உணவுகளை முழுமையாக தவிர்ப்பது நன்மை தரும்.