Junk foods: இந்த உணவுகளை விரும்பி உண்பவரா நீங்க? அப்போ புற்றுநோய் அபாயம் உறுதி
பொதுவாகவே தற்காலத்தில் ஆண் பெண் இருபாலாரும் வேலைக்கு செல்லும் நிலை காணப்படுகின்றது.
இதனால் ஆரோக்கியம் குறித்து யாரும் அதிகமாக அக்கறை செலுத்தும் நிலை அருகி வருகின்றது காய்கறிகளிலிருந்து இறைச்சி வரை அனைத்துமே பதப்படுத்தப்பட்ட வடிவில் எளிதாகக் கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
சமைக்காத உணவுகள் மட்டுமல்லாது தற்போது உண்பதற்கான தயார் நிலையில் இருக்கும் ready-to-eat என சூடுபண்ணி சாப்பிடக்குகூடிய உணவுகளும் கிடைக்கின்றது.
இந்த உணவுகளை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க அவற்றில் பதப்படுத்தும் காரணிகள் அதாவது ஏராளமான ரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக இனிப்பு, உப்பு மற்றும் ஃபுட் கலர்ஸ் என்பவற்றை பயன்படுத்துவதோடு அதனை நுகர்வோருக்கு கவர்ச்சியாக காட்டுவதற்கு விதவிதமான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும் பொதி செய்கின்றனர்.
குக்கீகள், சோடா, டோனட்ஸ், கேண்டி மிட்டாய், பீட்சா, சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ், துரித உணவுகள் போன்றவை அதில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
பாதக விளைவுகள்
இவ்வாறான உணவுகளில் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் கொழுப்புச்சத்து அதிகளவில் உள்ளது.
இந்த உணவுகள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் அது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலிலுள்ள நல்ல கொழுப்புகளின் அளவைக் குறைத்து, கேடு விளைவிக்கும் கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது அது பக்கவாதம் மற்றும் நாள்பட்ட பிரச்னைகளுக்கு அடித்தளமிடும்.
ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது. ஸ்டார்ச்சுகள் சர்க்கரைகளாக உடைக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
மார்பக புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவை அதிகப்படியாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |