டீ, காபியில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடுபவரா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான்
பொதுவாகவே டீ மற்றும் காபியுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்ற சிற்றுண்டி உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இன்னும் சிலருக்கு பிரதான உணவை விடவும் டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடும் தின்பண்டங்களில் தான் அலாதி இன்பம் கிடைக்கும்.
ஆனால் இது உடல் ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் பிஸ்கட் மற்றும் ரஸ்க் போன்ற தின்பண்டங்களை டீ மற்றும் காபி உடன் சேர்த்து சாப்பிடுவதால் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
முக்கிய பாதிப்புகள்
பிஸ்கட் மற்றும் ராஸ்க் போன்றவற்றை தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது உடனடியாக குட்டி பசிக்கு தீர்வு கொடுக்கின்ற போதிலும் குருதியில் சர்க்கரை அளவை வெகுவாக அதிகரிக்கும்.
சர்க்கரையின் அளவை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை பாதிக்கலாம். ரஸ்க்கை தினமும் உட்கொள்வதால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய் அபாயங்களை உருவாக்குகின்றது.
குறிப்பாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பழக்கம் பாதக பலன்களையே கொடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டீ மற்றும் காபியுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிடுவது இதய கோளபறுகள் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
இந்த ஆரோக்கியமற்ற கலவையானது மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
பிஸ்கட் மற்றும் ரஸ்க் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை முடிந்தவரை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |