இரவில் பால் குடிப்பவரா நீங்க? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பாலில் கால்சியம் நிறைந்துள்ளதாலும் பால் ஒரு நிறையுணவு என்பதாலும் இரவு தூங்க போவதற்கு முன்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு டம்ளர் பால் குடிப்பது தொண்டுதொட்டு வழக்கமாக காணப்படுகின்றது.
ஆனால் இது எல்லா வயதினருக்கும் பொருத்தமானதா?என கேட்டால் நம்மில் பலரிடம் தெளிவான ஒரு புரிதல் இருக்காது என்பதே நிதர்சனம். விஞ்ஞான ரீதியில் பார்த்தோமானால் நம்முடைய சிறுகுடலில் லாக்டேஸ் என்சைம் காணப்படுகிறது.
இரவில் பால் குடிக்கலாமா?
இரவோ, பகலோ நாம் பால் குடிக்கும் போது இந்த லாக்டேஸ் என்சைம் பாலில் உள்ள கேலக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் என்பவற்றை சிறிய மூலக்கூறுகளாகப் பிரித்தெடுக்கும்.
அப்படி மூலக்கூறுகள் பிரியும் போது நாம் குடிக்கும் பாலில் உள்ள லாக்டிக் அமிலத்தை சரியான முறையில் நம்முடைய உடல் உற்ஞ்சிக் கொள்ளும். பொதுவாக சிறுவயதில் இந்த லாக்டேஸ் என்சைம்கள் அதிக அளவில் இருக்கும்.
குழந்தைகள் திட உணவுகள் சாப்பிட தொடங்கும் முன்னர் வெறும் பால் தான் அவர்களுக்கு உணவாக இருக்கும். ஆனால் பிறந்தது முதல் ஐந்து வயது வரைக்கும் குழந்தைகளுக்கு லாக்டேஸ் என்சைம் அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால் அவர்கள் குடிக்கும் பால் வேகமாக ஜீரணமாகிறது மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலத்தை உடல் சரியாக உறிஞ்சும். என்சைமின் உற்பத்தியில் மாற்றம் ஆனால் வயதாக வயதாக இந்த என்சைமின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கிறது.
ஏரதாழ 30 வயதாகும்போது லாக்டேஸ் என்சைம் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படுகிறது. அதன்பின் நாம் பால் குடித்தாலும் லாக்டேஸ் என்சைம் இல்லாத காரணத்தால் பாலில் உள்ள கால்சியத்தையோ லாக்டிக் அமிலத்தையோ நம்முடைய உடல் உறிஞ்சுவதில்லை இதனால் பால் குடிப்பதில் எதுவித பயனும் இல்லை.
நம்மில் சிலர் சிறு வயதில் காலை, இரவு என இரண்டு வேளையும் நிறைய பால் குடித்து வளர்ந்திருப்போம். எனவே அதனையே வழக்கமாக வைத்திருப்போம் ஆனால் 30 வயதை தொடும்போது பால் குடித்தால் அழற்சியாக இருக்கும்.
குறிப்பாக இரவில் பால் குடித்தால் குமட்டல், தூக்கமின்மை, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படகூடும். இதற்கு முக்கிய காரணமே நம்முடைய உடலில் ஏற்படும் லாக்டோஸ் சகிப்புத் தன்மை தான்.
லாக்டேஸ் என்சைம்கள்உடலில் இல்லாத பட்சத்தில் பால் குடிக்கும் போது பால் குடலுக்குள் சென்று வீணாகும். அதோடு பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்த பாலை உறிஞ்சிக் கொள்ளும்.
இப்படி உறிஞ்சிக் கொள்ளும் பாலால் வயிறு உப்பசம் ,டயேரியா வாயுத்தொல்லை, அசிடிட்டி ஆகிய வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதுபோன்ற அழற்சி பிரச்சினை இருப்பவர்கள் பால் குடிப்பதற்கு முன்பாக லாக்டோஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வைத்தியர்களால் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். எனவே வயதாகும் போது இரவு நேரங்களில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் பால் குடிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
இருப்பினும் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் படுக்கைக்கு செல்வதற்கு மூன்று மணித்தியாலங்களின் முன்னர் பாலை எடுத்துக்கொள்வதனால் செறிமானப் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |