கற்றாழையை முகத்தில் தடவினால் இந்த தீமைகளும் வரும்: உங்களுக்கு தெரியுமா?
கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் சிறந்த பலனை தரும். கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது. இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன.
இவை உடலில் மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதை சாப்பிடுவதை விட மக்கள் அழகிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது. இதை முகத்தில் தடவும் போது ஒரு சில தோல் பிரச்சனைகளையும் இது கொண்டு வரும். இதை மக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்த பதிவில் கற்றாழையால் வரும் தீமை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழையால் சருமத்திற்கு கிடைக்கும் தீமைகள்
தோல் வெடிப்புகள் : சிலருக்கு கற்றாழையை முகத்தில் தடவுவதால் சொறி ஏற்படலாம். கற்றாழையில் லேடெக்ஸ் உள்ளது. இது தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதைப் பயன்படுத்துவதால் தோல் வெடிப்புகள் வரும். இதனால் பலருக்கும் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படலாம். கற்றாழையைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு சொறி ஏற்பட ஆரம்பித்தால் உடனடியாக அதைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தோல் எரிச்சல் : கற்றாழையில் சில நொதிகள் உள்ளன, அவை உணர்திறன் கொண்ட சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். மிகவும் உணர்திறன் சருமம் கொண்டவர்கள் கற்றாழையை பயன்படுத்த கூடாது.
இந்த பிரச்சனை கொண்ட நபர்கள் கற்றாழையை பயன்படுத்தினால் எரியும் மற்றும் கொட்டும் உணர்வை இது ஏற்படுத்தும்.
முகப்பரு பிரச்சனை : கற்றாழை சருமத்தில் முகப்பருவையும் ஏற்படுத்தும். இந்த கற்றாழை பயன்படுத்துவது தோல் துளைகளை அடைத்துவிடும். இதன் காரணமாக, முகத்தில் பருக்கள் பிரச்சனை ஏற்படலாம்.
அடிக்கடி பருக்கள் வருபவர்கள் கற்றாழையை பயன்படுத்த கூடாது. முகத்தில் ஏற்கனவே முகப்பரு அல்லது பருக்கள் இருந்தால், கற்றாழையை நேரடியாக சருமத்தில் தடவுவ கூடாது.
உணர்திறன் : கற்றாழை சூரிய ஒளி உணர்திறனையும் அதிகரிக்கக்கூடும். இது தவிர கற்றாழையை அதிகமாகப் பயன்படுத்தினால், அது முகத்தில் தோல் பதனிடுதல் மற்றும் வெயிலில் எரிதலை ஏற்படுத்தும்.
கற்றாழையைப் பயன்படுத்தியதன் பின்னர் வெயிலில் சென்றால் தோல் எரிச்சல் மற்றும் சிவத்தல் ஏற்படலாம். இதனால் தோலில் புள்ளிகள் ஏற்படும். எனவே கற்றாழையை இந்த பிரச்சனை கொண்டவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |