இதய நோயாளிகள் அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் ஆபத்து! என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
By Nivetha
பலருக்கு பிடித்த சைட் டிஷ்களில் ஊறுகாவும் ஒன்று.
பிடிக்கும் என்பதால் அதிகளவு ஊறுகாய் சாப்பிட்டால் பல்வேறு ஆபத்துகளுக்கு வழி வகுக்கும்.
நாம் இன்று அதிகமாக ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.
பக்கவிளைவுகள்
- ஊறுகாய் கெடாமல் இருக்க பயன்படுத்தும் ரசாயனங்களினால் செரிமானக் கோளாறு, அடிவயிற்றில் வலி,வயிற்றுப்போக்கு ஏற்படும்.
- ஊறுகாயில் கலந்திருக்கும் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடல் பருமனை அதிகரிக்கும்.
- ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உயர் ரத்த அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- செரிமான அமைப்பை ஊறுகாயில் கலக்கப்படும் மசாலா பொருட்கள் எரிச்சலூட்டும்.
- ஊறுகாயில் உள்ள அதிக அமிலத்தன்மையால் வயிற்றுப் புண் ஏற்படவும் வாய்ப்புண்டு.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைய அடிக்கடி ஊறுகாய் சாப்பிடுவதும் காரணம்.
- ஊறுகாயில் சேர்க்கப்படும் அதிகப்படியான எண்ணெய் ரத்தத்தில் உள்ள ட்ரை க்ளிசரைடுகளின் அளவை அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
- தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால் சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகமாக தேவைப்படும் அதனால் மெல்ல மெல்ல அதன் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும், சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று போன்றவை ஏற்படும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US