சார் நீங்க அஜித் மாதிரி கார் ஓட்றீங்க... - கூட்டத்தில் ரசிகர் கூறிய வார்த்தையால் சித்தார்த் ரியாக்ஷனை பாருங்க....
சார் நீங்க அஜித் மாதிரி கார் ஓட்றீங்க... - கூட்டடத்தில் ரசிகர் கூறிய வார்த்தையால் சித்தார்த் செய்த ரியாக்ஷன் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சார் நீங்க அஜித் மாதிரி கார் ஓட்றீங்க...
ரொம்ப இடைவெளிக்கப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் தற்போது ‘டக்கர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். நடிகை திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் யோகிபாபு, அபிமன்யுசிங் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் ‘டக்கர்’ படத்தை தன் படக்குழுவினருடனும், ரசிகர்களுடன் நடிகர் சித்தார்த் கண்டுகளித்தார்.
அப்போது, ரசிகர் முன்னிலையில், சித்தார்த் பேசுகையில்,
மதுரைக்கு இப்படத்தை உங்களுடன் பார்க்க வந்தேன். மதுரையில் பிரியாணி, சிக்கன் சுக்கா சாப்பிட்டேன். ரசிகர்களுக்காக நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். படத்தைப் பார்த்து நீங்கள் ஜாலியா என்ஜாய் பண்ணணும்.
ஒவ்வொரு ஊராய் சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து வருகிறோம். மதுரைக்கும் வந்து உங்களுக்கு ஒரு சலாம் போட்டு அடுத்த ஊருக்கு செல்கிறோம் என்றார். நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் சார்... நீங்கள் அஜித்சார் மாதிரி கார் ஓட்டுறீங்... என்று கத்தினார்.
அப்போது சித்தார்த் செய்த ரியாக்ஷனைப் பாருங்க -
நடிகர் அஜித் மாதிரி கார் ஓட்றீங்க... ரசிகர் கூறிய வார்த்தையால் நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சி?#AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/ZkyWghMPur
— Honcock AK? (@HONCOCK_AK) June 12, 2023