ரத்த புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் அவசியமா?
ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வேலையை செய்கிறது.
அதே போன்று ரத்தத்தில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவியாக இருக்கிறது.
பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. அதில் ரத்தத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும் போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
இதனை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1. லுகேமியா
2. லிம்போமா
3.மல்டிபிள் மைலோமா
அந்த வகையில் ரத்த புற்றுநோய் பற்றியும், அதற்கான சித்த மருத்துவம் பற்றியும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. லுகேமியா வகை புற்றுநோய் இருப்பவர்கள் எளிதில் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு இருக்கும்.
2. எந்தவித காரணமும் இல்லாமல் அதிகப்படியான வியர்வை இருக்கும்.
3. இரவில் சோர்வு அல்லது பலவீனம், காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படும் பொழுது அதுவும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பொழுது தொற்றுநோய்கள் அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடிக்கடி தொற்றுகளால் அவஸ்தை இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்வது சிறந்தது.
5. பசியின்மை, குமட்டல் மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்வதற்கு முன்னர் புற்றுநோய் பரிசோதனை செ்யய வேண்டும்.
6. சிலருக்கு வயது காரணமாகவும், நோய் நிலைமை காரணமாகவும் எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி இருக்கும். அப்படியானவர்கள் புற்றுநோய் பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது.
7. வீங்கிய நிணநீர் சுரப்பிகள், குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதிகளில் வீங்குதல், கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் ஆகிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
8. ரத்த புற்றுநோயாளர்களுக்கு தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றி இருக்கும். அப்படி இருப்பவர்கள் மருத்துவ பரிசோதனைகள் எடுத்து கொள்வது சிறந்தது.
பரிசோதனைகள்
ரத்த சோகையால் வெளிறிய தோல், நிணநீர் கணுக்களின் வீக்கம் மற்றும் கல்லீரல், மண்ணீரலின் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளினால் இந்த நோயை கண்டறியலாம்.
ரத்த பரிசோதனை செய்யும் பொழுது இதனை கண்டறியலாம்.
இடுப்பு எலும்பில் இருந்து எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து லுகேமியா செல்களை கண்டறியலாம்.
சித்த மருத்துவம்
1. நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தாவரமாகும். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் வின்கிரிஸ்டின் மற்றும் வின்பிளாஸ்டைன் மருந்துகள் ரத்த புற்று நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கொடிவேலி மாத்திரை, சேராங்கொட்டை நெய் போன்ற மருந்துகள் ரத்தப்புற்றுநோய் தவிர்ந்து வேறு வகையான புற்றுநோய்களையும் சரிச் செய்யலாம்.
2. துளசி
வீட்டில் வாஸ்துவிற்காக வளர்க்கப்படும் துளசி செடியில் உள்ள இலைகளில் தைமோல் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. இது புற்றுநோயை எதிர்த்து போராடும். அத்துடன் புற்றுநோய் வளர்ச்சியையும் தடுக்கும்.
3. மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் புற்றுநோய் வளர்ச்சியை தடுத்து, நிவாரணம் தடுக்கிறது.
4. பூண்டு
சமையலறையில் உள்ள பூண்டில் அலிசின், டைஅலைல் சல்பைடுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.
5. முள்சீத்தாப்பழம்
முள்சீத்தாப்பழத்தில் உள்ள ரெட்டிகுலின், கோரெக்சிமைசின் ரத்த புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |