இந்த 5 ராசியும் பேசுவதற்கு கூட அதிகம் வெட்கப்படுவார்கள்! ஏன் தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோரின் பிரச்னையே தாங்கள் நினைக்கும் கருத்தை வெளியில் பேச அதிகம் கூச்சப்படுவதும், வெட்கப்படுவதும் தான் காரணம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பேசுவதற்கு முன் பயமோ அல்லது கூச்சப்படும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
கடகம் கடக ராசியினர் சற்று பயந்த மற்றும் கூச்ச சுபாவமுள்ள மனிதர்கள். அவர்கள் பொதுவாக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கவனிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். அதே போல் மற்றவர்கள் சொல்வதை கேட்பவர்களாக இருப்பார்களே தவிர தங்களின் கருத்தையோ, எண்ணத்தையோ வெளிப்படுத்தத் தயங்குவர்.
இவர்கள் அமைதியாக இருப்பதை விரும்புவார்கள், மற்றவர்களின் ஆளுமையிலேயே இருப்பார்கள். கன்னி கன்னி ராசியினர் தாங்கள் என்ன கூற வேண்டும் என்று பல முறை நினைப்பார்கள், யோசிப்பார்கள், கற்பனை செய்துபார்ப்பார்கள்.
இருப்பினும் , வெட்கத்தால் அவர்களின் கருத்தை அதிகளவில் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். இவர்களின் கூச்சமும், அமைதியாக இருக்கும் குணமும் பெரும்பாலும் தங்களின் வாய்ப்புகளை பெரும்பாலும் இழந்துவிடுவர். விருச்சிகம் விருச்சிக ராசியினரின் மற்றொரு பெயர் ரகசியம் என்று வைத்துக் கொள்ளலாம். இவர்களின் செயல்பாடு எப்போதும் மர்மமாகவும், இரகசியமாகவும் இருப்பார்கள்.
அதோடு புதிய நபர்கள் மத்தியில் பேச கூச்சப்படுவார்கள். புதிய நண்பர்களாகவும், நபராக இருந்தாலும் அவர்கள் நம்பும் வரை அவர்கள் முன் விருச்சிக ராசியின் மனதை திறக்கமாட்டார்கள். மகரம் மகர ராசிகள் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவர்கள். இவர்களின் மனதை திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் தங்களின் குரலை உயர்த்தி கூட பேச அஞ்சுவார்கள்.
இவர்களிடம் தலைமை குணங்கள் அதிகம் உள்ளன, ஆனால் இவர்களின் பயம் காரணமாக இவை அடங்கிப் போகின்றன. மீனம் மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களை சுற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மிகவும் வேடிக்கையானவர்களாக, சாகச மற்றும் நகைச்சுவையானவர்கள்.
இவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நன்றாக பேசினாலும், பொது இடத்தில் மனம் திறக்க பயப்படுவார்கள். அவர்களின் குரல் எடுபடாத நிலை தான் இருக்கும்.