ஹிந்தி 'Bigg Boss' இல் இருப்பதை மறந்து தமிழில் பேசிய ஸ்ருதிகா! ரசிகர்களால் ஈர்க்கப்படுவாரா?
தற்போது ஹஜந்தியில் நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 18 இல் தமிழ் தென்நிந்திய நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இதில் இவர் வெளிப்படுத்தும் சுட்டித்தனங்கள், வெகுளி பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மக்களால் விரும்பப்பட்ட வருகின்றது.
தமிழில் பிக்பாஸ் சீசன் 1 முதல் 7 வரை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் 8-வது சீசனில் இருந்து விலக நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஹிந்தி பிக்பாஸில் தற்போது 17 சீசன்களுககு பின்னர் இந்த 18 வது சிசனில் முதலாவது தடவையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையும், ‘‘குக் வித் கோமாளி’’ நிகழ்ச்சியின் டைட்டில்வின்னருமான ஸ்ருதிகா அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார்.
இவர் தான் முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து ஹிந்தி பிக் பாஸிற்கு சென்றுள்ளார். இவர் எப்படி விளையாட போகிறார். ஹிந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பாரா என்ற கேள்வி இருந்தது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி தனது குழந்தை தனத்தால் ஸ்ருதிகா கவனம் ஈர்த்தாரோ, அதே குழந்தை தனத்தால் தற்போது இந்தி பிக்பாஸிலும் சுட்டித்தனம் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
பிக்பாஸில் இவர் வெளிப்படுத்தும் சுட்டித்தனங்கள், வெகுளி பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் இந்த செயல் முதன் நாளில் ஹிந்தி ரசிகர்களுக்கு செயற்கையாக தெரிந்தாலும் தற்போது அவர்களையே ஸ்ருதிகா ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் இந்த பிக் பாஸில் ஹிந்தி தான் பேச வேண்டும். ஆனால் இவர் அதை மறந்து ஒரு சந்தர்ப்பத்தில் "சும்மா Bigg Boss" என்று தமிழ் வார்த்தையை பேசி விடுவார். இதன்போது வெளியிடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Bigg Boss : Kya chal raha hai
— LION ? (@LION_EDIT5) October 8, 2024
Shrutika : Vaisa hin time paas kar raha hai chumma bigg boss ??#Biggboss18 #Biggboss #BB18#ShrutikaArjun #Shrutika #Shruthika pic.twitter.com/QjOX0TvV7f
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |