குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா - வைரலாகும் வீடியோ
குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஸ்ரேயாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானி ‘சிவாஜி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். விஜய், ஜெயம் ரவி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற படத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாட ஸ்ரேயாவிற்கு அழைப்பு வந்தது.
அதிக சம்பளத்திற்கு அப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடினார் ஸ்ரேயா. அதன் பிறகு ஸ்ரேயாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்து வெளிநாட்டிலேயே அவர் செட்டிலானார். கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரேயாவிற்கு ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து குடும்பத்தை கவனிப்பதற்காக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் ஸ்ரேயா. ஆனால், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தன் குழந்தையோடு இருக்கும் படங்களையும், கணவருடன் இருக்கும் நெருக்கமான படங்களையும் வெளியிட்டு வந்தார். தற்போது மீண்டும் ஸ்ரேயாவிற்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் திருமணமாகிவிட்டால் மார்க்கெட் போய் விடும். ஆனால், அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. நடிகைகளுக்கு திருமணமானால் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பேன் இந்தியா’ படமான ‘கப்ஜா’ படத்தில் நடித்தார் ஸ்ரேயா.
தற்போது இயக்குநர் பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'மியூசிக் ஸ்கூல்' படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார். இப்படம், இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாள்ர இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஸ்ரேயா கொள்ளை அழகில் ஜொலித்துள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -