மருத்துவமனையில் நடமாடும் மர்மம்.. கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி..
கண்ணுக்கு தெரியாத நோயாளிக்கு மருத்துவமனை பாதுகாவலர் முதலுதவி செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் மர்மம்
ஆர்ஜென்டினாவிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றிற்கு கண்ணுக்குத் தென்படாத நோயாளியொருவர் வருகை தந்துள்ளார்.
இதன்போது அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவமனை பாதுகாவலரும் குறித்த நோயாளியின் விவரங்களை கேட்டறிந்து குறித்துக் கொள்கிறார்.
இதனை தொடர்ந்து குறித்த நோயாளிக்கு சக்கர நாற்காலியை எடுத்து அமரச் செய்கிறார். இந்த சம்பவம் மருத்துவமனையிலுள்ள கமெராவில் பதிவாகியிருந்தது.
சில நாட்களுக்கு பின்னர் சம்பவ தினத்தை பார்க்கும் போது பேதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வந்த குறித்த நோயாளியின் விம்பம் கமெராவில் பதிவாகவில்லை.
நெட்டிசன்களின் கருத்துக்கள்
இந்த ஷாக்கிங்கான வீடியோவை சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் குறித்த நபர் நடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
21 Nov 2022 : Local Argentina news outlets reported that the guard had registered the name of a woman who had died at the hospital the previous day.
— Anand Panna (@AnandPanna1) November 22, 2022
Argentina hospital security guard checked in ghost patient...
https://t.co/vgW4tJcl4S pic.twitter.com/OVubdhLUJJ