பட்டப்பகலில் மாணவர்கள் முன்பே ஆசிரியர் செய்த அதிர்ச்சி காரியம்.. வைரலாகும் வீடியோ!
பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபாட்டிலலுடன் போதையில் சிக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பலகா மண்டலில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மண்டல் பரிஷத் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கோடீஸ்வர ராவ். இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளியிலேயே மது குடிப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்பதற்காக பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை சந்தித்துள்ளனர். அப்போது, அந்த ஆசிரியர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்தா காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மேலும், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அந்த மாணவரின் தாய், அந்த ஆசிரியரிடம் சின்னஞ்சிறு மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில், ஆசிரியரான நீங்கள் இது போன்று நடப்பது முறையா? என கேட்டதற்கு, ஆசிரியர் கோடீஸ்வர ராவ் அப்பெண்ணை திட்டுகிறார்.
மேலும், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், எனது ஆடையை வேண்டுமானாலும் களைகிறேன் என்று வீடியோ எடுத்து வெளியிடுங்கள் எனவும் கூறுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஆந்திர அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.