எலும்பும் தோலுமாக மாறி ஷாக் கொடுத்த நடிகை... கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகாவா இது?
ஹன்சிகா தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக ஆகிவிட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உடம்புக்கு முடியலையா, ஏன் இப்படி நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகிறீர்கள்?. எங்களால் பார்க்க முடியவில்லை.
ஹன்சிகாவுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான். இப்படியே ஒல்லியாகிக் கொண்டே இருந்தால் உங்கள் சங்கத்தில் இருந்து விலகிவிடுவோம். ஒல்லி ஹன்சுவை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கமோ குஷ்புவும் தன் உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டார்.
ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க, ஹன்சிகாவிடம் இருந்து கற்றுக் கொண்டீர்களா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். வர வர கோலிவுட்டில் இருக்கும் நடிகைகள் எல்லாம் ஒல்லியாகிக் கொண்டே இருப்பது சரியில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.