நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அதிர்ச்சி காரியம்.. அலறிய சகப்பயணிகள்!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் சாகசம் செய்வதாக அவசரக் கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதே மாநிலம் வாரணாசியின் விமான நிலையத்திற்கு ஸ்பெஸ்ஜெட் விமான வந்துள்ளது. அப்போது, விமானத்தில் பயணம் செய்த பயணியான கவுரவ் என்பவர் பறந்து கொண்டிருக்கும் விமானத்தி இருந்து அவசரக் கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதைக்கண்ட, விமானப் பணிப்பெண்கள் அதிர்ச்சியடைந்து, தடுக்க முயன்றும் முடியாததால், சக பயணிகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், உடனே விமானத்தை தரையிரக்கப்பட்டதும், அந்த நபரை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து சக பயணிகள் தெரிவிக்கையில், விமானம் புறப்பட தொடங்கியதில் இருந்தே அவர் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டிருந்தார்.
அதன்பின்பு விமானம் நடுவானில் சென்ற பின்பு அவசரக் கதவை திறக்க முயன்றார்.
அவரை தடுத்து நிறுத்துவதற்குள் எங்களுக்கு திகிலாகவே இருந்தது என கூறியுள்ளனர்.