ஷிவானி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்: தலைவி என்ன இப்படி தெரியுது? ஜும் செய்து பார்த்து தெறிக்கவிடும் ரசிகர்கள்
நடிகை ஷிவானி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்று கூறலாம்.
சினிமாவில் அடியெடுத்து வைக்க நல்ல கருத்துள்ள படத்திற்கு காத்திருந்த இவருக்கு முதல் படமே ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் நடிப்பதுடன், சில நடிகர்களின் படத்தில் நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
தற்போது எதார்த்தமாக சோபா ஒன்றில் அமர்ந்து கொண்டு புகைப்படம் வெளியிடடுள்ளார்.
இந்த போட்டோவிற்கு எல்லாம் என்ன பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கப்போகிறது? என்று நினைத்திருந்தால் அது தவறு என்று நினைக்கத் தோன்றும் வண்ணம் லைக் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தெளித்து இவரது ரசிகர்கள் அதையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சாதாரண ஒற்றை போட்டோவிற்கு ஆயிரகணக்கான கமெண்ட்டுகளையும், ஆயிரக்கணக்கான லைக்குளையும் கொடுத்து வருகின்றனர்.
அதிலும் போட்டோவை ஜூம் செய்து பார்த்து தொப்பை தெரியுது தலைவி!!! என்று ஒரு ரசிகர் வருத்தப்படுவது தான் ஹைலைட்.
படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போட்டோ போடுவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்ஸ்டாகிராமில் ஷிவானி அவர்களின் டிஆர்பி இறங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.