ஷிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபல ரிவியிலிருந்து வெளியேறுகிறாரா பிரியங்கா? பரபரப்பு தகவல்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவாங்கி தற்போது அந்நிகழ்ச்சிக்கே தொகுப்பாளராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷிவாங்கி சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவரை பட்டி தொட்டி வரை, பிரபலப்படுத்தியது மட்டுமின்றி பார்வையாளர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகின்றார்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்த ஷிவாங்கி இப்போது, அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறியுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் ஒன்றையும் போட்டுள்ளார். இதன் மூலம் இது நாள் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா எங்கே என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதேபோல், பிரபல டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியை கூட மிக அண்மையில் பிரியங்கா இல்லாமல் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் வைத்து பார்வையாளர்கள் நிச்சயம் தொகுப்பாளினி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார் என்றும், இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.