நடுக்கடலில் மாலையும், கழுத்துமாக பிரபல நடிகை; வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் திரௌபதி.
இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.
இந்த நடிகையான ஷீலா ஏற்கனவே டூ லேட் என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நேரடியாக டிவியில் வெளியான யோகி பாபுவின், மண்டேலா படத்திலும் ஷீலா நடித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை ஷீலாவின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடுக்கடலில் ஒருவருடன் மாலையுடன் இருக்கிறார் நடிகை ஷீலா.
இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.