ஷவர்மா திடீரென பாய்சன் ஆவது எப்படி? இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!
கேரளாவில் கடந்த நாட்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், அந்த பகுதியில் இருந்த ஷவர்மா கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது தமிழ்நாடு முழுக்க ஷவர்மா கடைகளில் தொடர் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஷவர்மா திடீரென பாய்சனாக மாறுகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். முதலில் உணவுகளில், கலக்கப்படும் கெமிக்கல், மற்றும் அதை சமைக்க பயன்படுத்தப்படும் சுத்தமில்லாத தண்ணீர் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
அடுத்து, உணவுகளை மோசமான இடங்களில் வைக்ககூடாது.. கெட்டு போன உணவுகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றில் இருந்து மூளை, நரம்பு மண்டலத்தை கூட பாதிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறிகுறிகள்
பொதுவாக ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உடல் நிலை மோசமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- வாந்தி
- தலை சுற்றல்
- பேதி
- வயிறு வலி
- உடல் வலி
- பசியின்மை
- செரிமான பிரச்சனை
- காய்ச்சல்
- தலைவலி
- மயக்கம்
- மலத்தில் ரத்தம் செல்வது.
மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை உணவு பாய்சன் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.
வைரஸ்
அதேப்போன்று Norwalk, norovirus, sapovirus, rotavirus மற்றும் astrovirus போன்ற வைரஸ்கள் உணவில் காணப்பட்டாலும் அவையும் உணவு பாய்சனை ஏற்படுத்தும்.
எச்சரிக்கை
முக்கியமாக உணவுகளை சாப்பிடும்போது ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தால் அந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அந்த உணவகம் சுத்தமான முறையில் உள்ளதா? தயாரிக்கப்படுகிறதா? என பரிசோதிக்கவும்.
குடிக்கும் நீர், மற்றும் சாப்பிடும் இடங்களில் பாக்டீரியா இல்லாத சுத்தமான இடங்களாக இருக்கிறதா? என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.