நடிகை சரண்யாவின் அம்மாவா இது? புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
பிரபல ரிவி சீரியல்களில் கலக்கி வரும் சரண்யா, இன்று அன்னையர் தினத்தையடுத்து தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும், செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ்,.
இவர் தன்னுடைய அட்டகாசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்ததோடு, கல்லூரி படிக்கும் போது தான் இவருக்கு கலைஞர் ரிவியில் செய்தி வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பின்பு பல முன்னணி ரிவிகளில் வலம் வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்ததோடு, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வத்துடன் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தையடுத்து, தனது தாயுடன் இணைந்து ஒரே மாதிரியான புடவையை அணிந்து புகைப்படம் எடுத்து, இன்ஷ்டாகிராமில் வெளியிட்டு, அன்னையர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சரண்யாவின் அம்மாவா இது? என்று கேள்வி எழுப்பியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.