கெட்டதை அள்ளிக் கொடுக்கும் சனி பகவானிடம் அதிர்ஷ்டத்தை பெறுவது எப்படி? அருளின் மகிமை
நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
Daily Rasipalan: கன்னி ராசியினர் இதில் கவனம் தேவை.. பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன?
மற்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்சனை என்றாலும் கூட அமைதியாக இருக்கும் மக்கள், ஜாதகத்தில் சனியால் பாதிப்பு அல்லது ராசிக்கு சனியால் பாதிப்பு என்றதும் சனி பகவானின் கோவிலுக்கு சென்று வழிபட துவங்கி விடுவார்கள்.
ஏனெனின் சனி பகவானின் பிடியில் இருந்து தப்பித்து, அவரின் அருளை பெற்று, துன்பம் இல்லாமல் வாழ்வது தான் சிறந்தது.
சனி பகவானின் பாதிப்பு இருந்தால் நிச்சயம் பரிகாரம் செய்யாதவர்களும் செய்வார்கள்.
அந்த வகையில், சனியை கண்டு அனைவரும் பயப்பட என்ன காரணம்? அப்படி சனிக் கொடுக்கும் பலனை எப்படி அதிர்ஷ்டமாக மாற்றுவது? என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சனி பாதிப்புகள் விலக பரிகாரம்
- பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை பொடித்து, சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
- அப்போது உங்கள் கையில் அரிசி மாவை போட்டுக் கொண்டே சுற்றி வர வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும்.
- அப்படி தூக்கி செல்லும் பொழுது நமது பாவங்கள் அனைத்தும் இல்லாமல் போய் விடும்.
- வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம்.
- சனிக்கிழமைகளில் செய்வது இன்னும் இரட்டிப்பான பலன்களை தரும்.
சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
- ஒருவருக்கு சனி பகவானின் தாக்கம் வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
- அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி குடும்பத்தை பிரித்து விடும்.
- அஷ்டமத்து சனியின் பாதிப்பு உள்ளவர்கள், தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. இவர்கள் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும்.
- சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க இந்த பரிகாரம் செய்வார்கள். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
- சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களிடம் உதவியை பெற்று கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).