சனி தோஷத்தில் இருந்து தப்பிக்கனுமா? அப்போ இந்த பரிகாரங்களை செய்தால் போதும்!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி பகவானின் பங்கு அதிகம் இருக்கிறது.
சனி பகவான் கர்மா மற்றும் நீதியின் கடவுளாக இருப்பவர். கர்ம பலன்களை அருளும் சனி பகவான், நல்ல செயல் செய்பவர்களுக்கு நல்ல பலனையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு தீய பலனையும் தருகிறார்.
பொதுவாகவே சனி என்றால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி என எமக்கு கஷ்டத்தை கொடுப்பவர் என்பது நாம் அறிந்ததே.
இப்படி சனி தோஷத்தில் இருந்து தப்பிக்க பலரும் பெரும்பாடு படுவார்கள், ஆனால் இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்க பரிகாரங்கள் சில இருக்கிறது.
சனி தோஷ பரிகாரம்
சனி தோஷத்தில் பிடிப்பட்டவர்கள் சனி பகவானுடன் தொடர்புப்பட்ட கருப்பு எள் அல்லது கருப்பு உளுந்து என்பவற்றை வைத்து சனிக்கிழமைகளில் பரிகாரம் செய்து வந்தால் உங்கள் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகும்.
அந்தப் பரிகாரம் என்னவெனில் உளுத்தம் பருப்பில் குங்குமம் மற்றும் தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கி அரச மரத்தில் தெளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும் என்பதாகும்.
சனிக்கிழமைகளில் ஓடும் நீரில் கருப்பு எள்ளுடன் கருப்பு உளுத்தம் பருப்பை தண்ணீரால் ஓட விட்டால் நிதிப்பிரச்சினைகள் இல்லாமல் போய் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
சனி கிழமைகளில், உளுத்தம் பருப்பு கிச்சடி செய்து, அதை தானம் செய்தால் சனியில் தோஷம் பெரிய சிரமமாக இருக்காது.
ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை நிரப்பி, அதை சனிக்கிழமை இரவு படுக்கைக்கு அடியில் வைக்கவும். அடுத்த நாள், அந்த எண்ணெயில் உளுத்தம்பருப்பு உருண்டை செய்து நாய்க்கு உணவளித்து வந்தால் துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் கிட்டும்.
சனிக்கிழமையில், ஒரு பிடி உளுத்தம் பருப்பை எடுத்து, அரச மரத்தின் ஒரு சிறிய குழி தோண்டி அதில் புதைக்கவும். அதன் பிறகு பீப்பல் மரத்தின் முன் இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்தால் நீதிமன்ற வழக்கில் இருந்து விடுதலை பெறலாம்.