என்னை வளர விடாம தடுத்தாங்க... இதற்கெல்லாம் காரணம் அவர்தான் - மனம் திறந்த ஷகிலா
நடிகை ஷகிலா
80களில் சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை திணறடித்தவர் நடிகை ஷகிலா. இவர் மலையாள திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தார். இவருடைய படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்படி கொடி கட்டி பறந்த ஷகிலாவால் டாப் ஹீரோக்களின் படங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.
பெரிய, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடிகர்களின் படங்கள்கூட மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஷகிலா படங்கள் காலி செய்து விட்டது. ஷகிலா வைத்து பல தயாரிப்பாளர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்தனர்.
இப்படி புகழின் உச்சிக்கே சென்ற கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஷகிலாவை வளர விடாமல் சிலர் சதி வேலைகளை செய்தனர்.
கோபத்தில் மம்முட்டி எடுத்த முடிவு?
சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகை ஷகிலா மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் நடித்த மலையாள படங்கள் வெளிவர முடியாத அளவுக்கு பல சிக்கல்களை சந்தித்தது. அதற்கு காரணம் நடிகர் மம்முட்டி தான் என்று என்னிடம் பலர் கூறினர். ஆனால், எனக்கு அவர் மேல் எந்த கோபமும் கிடையாது.
ஏனென்றால், என் படங்களால் பல நடிகர்களின் படங்கள் நஷ்டமடைந்தது. அப்படி இருந்தால் யாருக்கு தான் கோபம் வராது. அதன் காரணமாகத்தான் மம்முட்டிக்கு என் மேல் கோபம் இருந்துள்ளது. அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
என் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால், பல தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். இதையெல்லாம் பார்த்து தான் நான் மலையாள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன் என்று கூறினார்.