என் தங்கை என்னை ஏமாற்றிவிட்டாள்- மனம் திறந்து பேசிய நடிகை ஷகீலா
என் தங்கை நான் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டாள் என்று நடிகை ஷகீலா மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஷகீலா
நடிகை ஷகீலா 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்தள்ளார்.
மலையாளத்தில் வெளியான இவரது பல கவர்ச்சி படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர்.
இவருடைய வளர்ச்சியால் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் நடிகை ஷகீலா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,
எனக்கு சொந்த வீடு, கார் என்று எதுவும் கிடையாது. 40 வருடங்களாக நான் வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன்.
ஒரு காலத்தில் நான் சினிமாவில் ஒரு நாளைக்கு ரூ.40 லட்சம் வரை சம்பாதித்தேன். நம் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் என் தங்கை எடுத்துச் சென்றுவிட்டார்.
வீட்டில் பணத்தையெல்லாம் வைத்தால் வருமான வரி சோதனையில் நீ சிக்கிவிடுவாய் என்று என் பணத்தை எடுத்துச் சென்றவள் திரும்பி வரவே இல்லை. அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்.
இதனால் நான் மன உளைச்சலில் ஆளேன். பின்னர் சுதாரித்துக் கொண்ட நான் மீண்டும் மறுபடியும் ஓட ஆரம்பித்தேன் என்று மனம் திறந்து பேசினார். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.