சிறையிலிருக்கும் மூத்த மகனால் வீட்டில் தவிக்கும் இளைய மகன்! ஷாருக்கானின் பரிதாபநிலை
போதைபொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாருக்கின் இளைய மகன் அண்ணனை நினைத்து தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் (Aryan Khan) மற்றும் அபிராம் கான் (Abram Khan) என்ற இரண்டு மகன்களும், சுஹானா (Suhana Khan) என்கிற மகளும் உள்ள நிலையில், சுஹானா வெளிநாட்டில் படித்து வருகின்றார்.
ஆர்யனுக்கும் அபிராமிற்கும் இடையே 16 வயது வித்தியாசம் என்பதால், சகோதரர் போன்று இல்லாமல் அதையும் தாண்டி தந்தை மகனைப் பார்ப்பது போன்று ஆர்யன் தனது தம்பியை கவனித்து வந்துள்ளார்.
நடிப்பில் பிஸியாக ஒருபுறம் ஷாருக்கான் இருக்க மற்றொரு புறம், இவரது மனைவி கௌரி கானும் குடும்பம் மற்றும் சில தொழில்களை கவனித்து வரும் நிலையில், அபிராம் பெரும்பாலும் அண்ணன் ஆர்யன் வளர்ப்பிலேயே அதிகமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆர்யன் தற்போது போதை வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால், அண்ணனை பார்க்க முடியாமல் அபிராம் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.