செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் பொங்கல் கொண்டாட்டம்... லைரலாகும் புகைப்படம்
நடிகை ஷபானா தனது காதல் கணவருடன் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடிக்கும் வாய்பை பெற்றார்.
ஆனால் அதில் இருந்து பாதியிலேயே விலகினார். அதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலனா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை ஷபானா திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இருப்பினும் திருமணமாகியதில் இருந்து மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வலம்வருகின்ற இவர்கள், காதல் திருமணம் செய்பவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதுடன், ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி நடிகை ஷபானா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |