நான்கு நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி - இனி இந்த 4 ராசிகளுக்கு இந்த பிரச்சனைகள் வராது
டிசம்பர் 7 செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசியில் இடம்பெறும் பட்சத்தில் இதன் மூலம் நான்கு ராசிகள் பயன்பெறுகின்றது.
செவ்வாய் பெயர்ச்சி
கிரகங்களின் தளபதியான செவ்வாய், டிசம்பர் 7 இரவு 8:27 மணி முதல் ஜனவரி 16 காலை 4:36 மணி வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
மொத்தம் 39 நாட்கள் நீடிக்கும் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு மிகப்பெரிய நற்பலன்களை வழங்கும்.
செவ்வாய் கிரகம் வீரம், செல்வம், வெற்றி, நிலம், வீடு, சொத்து போன்றவற்றின் காரணியாக இருப்பதால், இந்த காலத்தில் 4 அதிர்ஷ்ட ராசிகளுக்கு மங்களகரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும்.
- இந்த பெயர்ச்சிக்கு பிறகு நீங்கள் மேற்கொள்ளும் வேலைக்கு அதிக முயற்சி தேவைப்படும்.
- எந்த காரியத்திலும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
- வாழ்க்கையில் பல நன்மைகள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.
- வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும்.
விருச்சிகம்
- செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது.
- விருச்சிக ராசிக்காரர்கள் டிசம்பர் 7 முதல் ஜனவரி 16, 2026 வரை சொத்துக்களால் பயனடையலாம்.
- இந்த பெயர்ச்சி நிலம், வீடு அல்லது வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வாய்ப்பை கொண்டு வரும்.
- இது லாபகரமானதாக இருக்கலாம். முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்ட இது சிறந்த நேரம்.
- வருமானத்தை அதிகரிப்பதுடன் நிதியில் முன்னேற்றம் கிடைக்கும்.
- நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு உள்ளது.
தனுசு
- செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
- இந்த நேரத்தில், உங்கள் தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
- நீங்கள் நினைத்த இலக்கை அடைய முயற்சியுடன் செயற்படுவீர்கள்.
- சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உங்களுக்கு வெற்றியைத் தரும்.
- ஆனால் மிக முக்கியமாக இந்த நேரத்தில் கோபத்தைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
- இது உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான நேரம்.
மீனம்
- தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் புகழையும் நற்பெயரையும் அதிகரிக்கும் எனப்படுகின்றது.
- வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணிக்காக பாராட்டுகளையும் சக ஊழியர்களின் ஆதரவையும் பெறுவார்கள்.
- தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வணிகத்தில் உள்ளவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
- சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள்.
- நேர்மறை சிந்தனையுடன் வேலை செய்யுங்கள்.
- இந்த காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).