சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த வெண்பா: இயக்குனர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக கலக்கி வரும் ஃபரீனா ஆசாத், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்ததற்கு இயக்குநர் தடை போட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக கடுப்பேற்றி வருபவர் தான் வெண்பா.
ஏனென்றால், வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்ட நிலையில், தற்போது பல சூழ்ச்சிகளை செய்து இருவரையும் பிரித்து வைத்துள்ளார்.
நடிகை ஃபரீனா சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், நிஜத்தில் கர்ப்பமாக இருந்து வருகின்றார். பரீனா வெளியிட்டு வரும் புகைப்படங்களை அவதானிக்கும் ரசிகர்கள் வயிற்றில் குழந்தையுடன் சீரியலில் நடிக்க வேண்டாமே என்று கூறி வருகின்றனர்.
பலர் வில்லியாக நடிக்கும் கதாபாத்திரத்தினை மனதில் வைத்துக்கொண்டு திட்டி வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் ஏன் தொடர்ந்து நடிக்கிறேன்? என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார் ஃபரீனா.
’கர்ப்பமாக இருப்பதால் வயிறு வெளியே தெரிய தொடங்கியிருக்கு, அதனால் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என இயக்குநரிடம் நானாக சென்று கூறினேன்.
ஆனால், நான் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த இயக்குநர், நான் பாத்துக்கிறேன், நீங்க போங்க என கேஷ்வலாக சொல்லிவிட்டார். அதனால், இப்போதைக்கு சீரியலில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
’வெண்பா’ கதாப்பாத்திரத்தில் புகுந்து விளையாடி வரும் ஃபரீனா, இப்போதைக்கு சீரியலுக்கு என்டுகார்டு போடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.