நடிப்பில் இருந்து ஓய்வு பெறும் சுந்தரி சீரியல் புகழ் ஸ்ரீ கோபிகா! அவரே வெளியிட்ட பதிவு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து பிரபலமான ஸ்ரீ கோபிகா மொத்தமாக நடிப்பை விட்டு வெளியேறப்போவதாக தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையதத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ரீகோபிகா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சீரியல் நடிகை ஸ்ரீகோபிகா.
சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை ஸ்ரீகோபிகா பெற்றார். இதனை தொடர்ந்து அன்பே வா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபல்யம் அடைந்தார்.
அண்மையில் வருண்தேவ் என்பவரை திடீர் திருமணம் செய்துக்கொண்ட இவர், தனது திருமணம் காதல் திருமணம் கிடையாது, பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என கூறி தனது சமூக வளைத்தள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்தார்.
திருமணத்தின் பின்னரும் சீரியல்களில் கமிட் ஆகி வந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாங்கல்யம் தந்துனானே சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது சுத்தமாக நடிப்பையே நிறுத்த முடிவு செய்துள்ளாதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |