அட இவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? வாழ்த்து போஸ்ட்டில் சிக்கிய தங்கமயில்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை சரண்யா துராதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருக்கு வாழ்த்து செய்தி பகிர்ந்தது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சரண்யா துராதி
ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் தான் சரண்யா துராதி.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” மற்றும் “ஆயுத எழுத்து” போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
இப்படி பல சீரியல்களில் நடித்து பிரபலமான சரண்யா துராதி, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மூத்த மருமகளான தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கணவருக்கு பிறந்த நாளா?
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரண்யா துராதி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
இவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான Followers இருக்கிறார்கள்.
அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அந்த வகையில், சரண்யா துராதி கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |