8 வருட காத்திருப்பின் பலன்.. தாயாகிய சீரியல் நடிகை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
8 வருடங்களுக்கு பின் தாயான சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நேஹா ராமகிருஷ்ணன்
கடந்த 2013ம்ஆண்டு கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லட்சுமி பாரம்மா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன். இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து 'சுவாதி சினுகுலு' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தமிழில் கல்யாண பரிசு, ரோஜா,மற்றும் பாவம் கணேசன் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
8 வருட காத்திருப்பின் பலன்
இதற்கிடையில் நடிகை நேஹா- சாந்தன் என்பவரை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேஹா- சாந்தன் தம்பதிகளுக்கு கடந்த 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள்.
அதற்கு பின்னர் இந்த வருடம் நேஹா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்கள் பகிர்வதன் மூலம் அறிவித்திருந்தார்.
நேஹா- சாந்தன் தங்களின் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அப்பா, அம்மாவாகிய தம்பதிகளுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
