யாரும் இந்த தப்பை செய்யாதீங்க! ரூ. 5000 லோன் கொடுத்த ஷாக்: கதறி அழுத பிரபல நடிகை
பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன், லோன் ஆப் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்
பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இவர், சீரியல் வாயிலாக ரசிகர் மனதில் இடம்பிடித்ததோடு, விருதுகளும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும், எனது மொபைல் போனை ஹாக் செய்ட்டுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
நடிகைக்கு நடந்தது என்ன?
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடன் அந்த ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது.
சுமார் 3-4 நாட்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு SMS வந்தது. அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பல மெசேஜ்கள், போன் கால்கள் என வந்தது.
மேலும் என்னை ஆபாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் வந்தது. அதோடு நான் இந்த 5000 ரூபாய் கட்டவில்லை என்றால், எனது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியதால், நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்.
இதனிடையே என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவர்க்கும் என்னை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது. அதன்பிறகே எனது மொபைல் ஹாக் செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை. உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க..
உங்க மொபைலும் இது போன்று ஹேக் ஆகும். " என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.