23 வயதில் ரூ.250 கோடியை தாண்டும் சொத்து மதிப்பு- இவ்வளவு சம்பாரிக்கும் சீரியல் நடிகை யார் தெரியுமா?
நடிகை ஜன்னத் ஜுபைர் எனப்படும் 23 வயது நடிகை பலக்கோடி கணக்கில் சொத்துக்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜன்னத்
தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி (Jannat Zubair) பார்க்கப்படுகிறார்.
இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
பிரபல பாலிவுட் ஸ்டார் ஹீரோவான ஷாருக்கானை விட இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. சுமாராக இவருக்கு இன்ஸ்டாகிராமில் மாத்திரம் 49.7 மில்லியன் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
“ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கிலாடி 12” மற்றும் “சிரிப்பு செஃப்” போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜன்னத் பங்கேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பல தனியார் ஆல்பங்களிலும் நடித்து வரும் ஜன்னத் 'கத்ரோன் கே கிலாடி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கோடிகளில் சொத்து மதிப்பு
இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகின்றது.
அத்துடன் 'நவ்வு செஃப்' ஒரு எபிசோடிற்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை பெற்றுள்ளார்.
நடிகை ஜன்னத் ஜுபைர் தனது 21வது வயதில் மும்பையில் சொந்த வீட்டை வாங்கியுள்ளார். ஜன்னத் ஒரு நடிகை மட்டுமல்ல. மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரும் ஆவார்.
ஊடக அறிக்கைகளின்படி, ஜன்னத்தின் நிகர மதிப்பு சுமார் ரூ.250 கோடி என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |