12 வயதில் மகன்... 2வது கர்ப்பமான நிலையில் இப்படி செய்யலாமா? நடிகையை திட்டி கமெண்ட்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.
வெள்ளத்திரை நாயகிகளை விடவும் கிராமத்தின் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமாகிவிடுகின்றனர் சின்னத்திரை நாயகிகள்.
அந்த வகையில் பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி, இவரது கணவர் யுவராஜ் நடனம் ஆடுவதில் வல்லவர்.
சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2 என சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
காயத்ரி- யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் உள்ள நிலையில், இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார்.
5 மாதமாக உள்ள காயத்ரிக்கு, சமீபத்தில் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் அவரது கணவர்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் திட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது தேவையா? கொஞ்சம் கவனமாக இருங்க என பதிவிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |