தோலில் கைக்குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாக்கியலட்சுமி நடிகை.. வைரலாகும் காணொளி
தோலில் கைக்குழந்தையை வைத்து கொண்டு ஆட்டம் போடும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திவ்யா கணேசன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வந்த "கேளடி கண்மணி" சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை திவ்யா கணேசன்.
இந்த சீரியல் சரியாக மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுக்கவில்லை. இதனால் சீரியல் பாதியுடன் நிறைவடைந்தது.
பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வந்த திவ்யாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுமாராக 1 வருடத்திற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மனைவி ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
குழந்தையுடன் நடனம்
இந்த நிலையில், திவ்யா தற்போது சீரியல், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கைக்குழந்தையுடன் நடனம் ஆடும் காணொளியொன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன், “குழந்தையை இப்படி அசைப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.” என்று ரசிகர்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |