கழுத்து நிறைய நகையுடன் சொக்க வைக்கும் ஆல்யா மானசா! வைரலாகும் புகைப்படங்கள்
சீரியல் நடிகை ஆல்யா மானசா கழுத்து நிறைய நகை அணிந்து தேவைதை போல் காட்சியளிக்கும் அசத்தல் புகைப்படங்களை தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கிய இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளுள் டாப்பில் இருக்கின்றார் ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

சீரியலில் மாத்திரமன்றி ஆல்யா மானசா விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குப்பற்றி வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு நகைக்கடையில் கழுத்து நிறைய நகைகள் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |