பிரபல சீரியல் நடிகர் திடீர் திருமணம்: மணமகள் யார் தெரியுமா?
பிரபல சீரியல் அன்பே வா சீரியல் கதாநாயகன் விராட் நவீனா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
நடிகர் விராட்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல். இதில் வருண் என்ற பெயரில் கதாநாயகனாக நடித்துவரும் நடிகர் தான் விராட். 2020ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.
இந்த நிலையில் விராட் என்பவருக்கும் நவீனா என்ற மணப்பெண்ணுக்கும் நேற்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகள் நவீனா ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பதும் பல நட்சத்திரங்களுக்கு இவர் மேக்கப் செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக நவீனாவை விராட் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருந்த நிலையில், தற்போது இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ரசிகர்கள், நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |