திடீரென எகிறிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 உயர்வு!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,720-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.290 அதிகரித்து ரூ.14,240-க்கு சென்றுள்ளது.

சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்வு! தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |