கணவன் மனைவி உறவில் இதை கட்டாயம் செய்யவே கூடாதாம்?
கணவன் மனைவி உறவு என்பது இன்று பல இடங்களில் ஒற்றுமை இல்லாமல் பிரிவுகளே ஏற்பட்டு வருகின்றது. விட்டுக்கொடுத்தல் இல்லாத வாழ்க்கை தான் பிரிவிற்கும், சண்டைக்கும் காரணமாக அமைகின்றது.
அதுவும் திருமணமாகி 7 ஆண்டுகள் தாண்டிவிட்டால், அதன் பிறகு எந்த சிக்கலையும் எளிதாக கடந்துவிடமுடியும். ஆனால், சிலர் அதற்குள் அவசரப்பட்டு இது நமக்கு ஒத்துவராது என்று குடும்ப உறவை முறித்துக்கொள்வார்கள்.
என்ன செய்யலாம்?
உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடித்தது எது, உங்கள் இருவருக்குள் என்ன பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்பதை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் எழுதுங்கள்.
அதைப் படிக்கும்போது, நீங்கள் செய்யும் தவறு என்ன? என்பது புரிந்து மனம் தெளிவாகும்.
தயக்கத்தை தவிர்க்கலாம்
கணவன் மனைவி இடையே இருக்கும் தயக்கத்தை தவிர்க்க வேண்டும். இருவரும் தங்கள் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை எந்தவித தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டும்.
பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்
கூட்டு குடும்பமாக இருக்கையில் வீட்டி பெரியவர்களிடம் தெரிவித்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
ஆனால், தனி குடும்பமாக இருந்தல் அது சாத்தியமில்லாத ஒன்று தான். குடும்ப பெரியவர்கள் அல்லது மனநல ஆலோசர்களை அணுகலாம்.
சுற்றுலா அவசியம்
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்படுகையில் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு.
மனைவிக்கு பிடித்தை கொடுங்கள்
கணவன் மனைவி இடையே பிரச்சினை பெரியதாகும் போது அதை பற்றி பேசாமல் சிறிது இடைவெளி விட்டு, பின் ஏதாவது அவர்களுக்கு பிடித்த பரிசை கொடுத்து அசத்தினால், கோபம் மறைந்து போகும்.
உறவு முக்கியம்
என்னதான் கணவன் மனைவி இடையே பிரச்சினை வெடித்தாலும், தாம்பத்திய உறவை தவிர்க்காமல் இருந்தேலே பாதி பிரச்சினை முடிந்துவிடும்.
மனம் விட்டு பழகும் போது இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆகையால் இதை செய்து சமாதானப்படுத்துங்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
