முதல் முறையாக குழந்தையின் முகத்தை காட்டிய சரவணன் மீனாட்சி ஜோடி
செந்தில் - ஸ்ரீஜா தம்பதிகளின் குழந்தையின் முகத்தை காட்டியவாறு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சீரியல் ஜோடி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர்கள் தான் செந்தில் - ஸ்ரீஜா.
இவர்கள் தொடரில் நடிக்கும் போது காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி இருவரும் இணைந்து “மாப்பிள்ளை” என்கிற சீரியலில் நடித்தார்கள்.
செந்தில் - ஸ்ரீஜா தம்பதிகள் திருமணம் செய்து 9 வருடங்கள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது.
குழந்தையை பார்த்துருக்கீங்களா?
இதனை தொடர்ந்து கடந்த வரும் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் குழந்தையின் முகத்தை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் குழந்தை அம்மா போல் இருக்கிறார் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
உருக்கமான பதிவு
மகன் பிறந்தவுடன் செந்தில் ஒரு உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்கள்.
அதில். “பெற்றோர்களாக பிறந்துள்ளோம் எங்கள் மகனால் நேற்று என்று தன்னுடைய மகனைக் குறித்து மகிழ்ச்சியாக பதிவிட்ட செந்தில், நேற்று எங்கள் மகனுக்கு பெற்றோராக பிறந்தோம். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |