செம்பருத்தி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! பார்வதியின் உண்மையான அப்பா இவரா?
செம்பருத்தி சீரியல் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
சுந்தரம் பார்வதியின் உண்மையான அப்பா இல்லை, அகிலாவுக்கு மிக நெருக்கமான இருந்து, அதன் பின் வீட்டை விட்டு வெளியேறிய ஒருவர் தான் பார்வதியின் அப்பா என தெரியவந்திருக்கிறது.
பார்வதி கோவிலுக்கு சென்று மிக உருக்கமாக "அப்பா எதோ ரகசியம் வைத்திருக்கிறார், அது என்ன என தெரியவேண்டும்" என வேண்டிக்கொள்கிறார்.
அதன் பின் அவர் வெளியில் வந்து பார்க்கும்போது அப்பா சுந்தரம் ஒரு போட்டோவை எல்லோரிடமும் காட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இவர் யாரை தேடுகிறார் என யோசிக்கும் பார்வதி அவரை பின்தொடர முடிவெடுக்கிறார். சுந்தரம் கோவில் கோவிலாக சென்று பிச்சைக்காரர்களிடம் போட்டோவை காட்டி விசாரிக்கிறார்.
சுந்தரம் போட்டோவை காட்டி கேட்ட நபர் ஒருகட்டத்தில் கிடைத்துவிடுகிறார். அவரை பற்றி கோவிலில் இருக்கும் ஒருவர் சொல்கிறார்.
அருகில் இருக்கும் பையனை கூப்பிட்டு அவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார். அங்கு சென்றால் அந்த நபர் இருமல் காய்ச்சல் உடன் குடிசையில் படுத்து இருக்கிறார்.
அதை பார்த்து ஷாக் ஆகும் சுந்தரம், 'எப்படி இருக்க வேண்டியவர், இப்படி இருக்கிறாரே' என கூறுகிறார். அதன் பின் அவரை எழுப்பி பேசுகிறார். சுந்தரத்தை பார்த்து அவரும் ஷாக் ஆகிறார். 'நீங்கள் விட்டுக்கொடுத்துவிட்டு வந்துவிட்டீர்கள். ஆனால் பார்வதி ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதனால் நீங்கள் வந்து அகிலா அம்மாவிடம் பேசுங்கள்' என கேட்கிறார் சுந்தரம். ஆனால் அவர் மறுக்க, நீங்கள் தானே பார்வதியின் உண்மையான அப்பா, வந்து தான் ஆகவேண்டும் என சொல்கிறார்.
அந்த நேரத்தில் பார்வதியும் அங்கு வருகிறார். இவர் யார் என கேட்கிறார். சுந்தரம் உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். அவர் உண்மையில் யார்? அகிலாவின் அண்ணனாக இருக்குமோ? பார்க்கலாம் மிக விரைவில் விடைக்கிடைக்கும்.