தனுஷுக்கு இப்படியொரு ரசிகனா? செல்வராகவன் வெளியிட்ட வீடியோ- ஆட்டத்தை பாருங்க
தனுஷ் பட பாடலுக்கு செல்வராகவன் மகன் போட்ட குத்தாட்டம் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் தனுஷ் அடுத்தடுத்து படங்கள் இயக்கி நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தனுஷ் நடிப்பில், குபேரா திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கான இசை வெளியிட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
திரை பிரபலங்கள் யார் விவாகரத்து செய்தாலும், அதில் தனுஷை இழுத்து உள்ளே விட்டு, அவரை பற்றிய விமர்சனங்கள் வைப்பது வழக்கமாகி விட்டது. இது போன்ற சர்ச்சைகளுக்கு குபேரா பட மேடையில் தனுஷ் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் தனுஷ் சினிமா, குடும்பம் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவருடைய மகன் யத்ராவின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டு, மகன்களை உற்சாகப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலானது.
தீவிர ரசிகனின் நடனம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இயக்குநர் செல்வராகவன், மகன் தனுஷ் பட பாடலுக்கு நடனம் ஆடும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில், மகன், தனுஷ் ஆடுவதை நன்கு கவனித்த பின்னர், இவர் ஆடுகிறார். அப்போது காணொளி எடுத்து கொண்டிருந்த செல்வராகவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள்,“ எங்களை விட இவர் தீவிர ரசிகனாக இருப்பார் போலயே..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |