மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கையின் அதிசயம்.... யாரும் போகாத சொர்க்க வாசலுக்குள் நடப்பது என்ன?
இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு. இந்த தீவுக்குள் புதைந்து கிடக்கும் பல இயற்கை அதிசயங்கள் சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்தது.
அதில் சில அழகிய இடங்களுக்கு பின் புலத்தில் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றது.
அப்படி புதைந்துப் போன ஒரு வரலாற்று இடம்தான் அசோக வனம். இராமாயணம் இதிகாசம் கூறும் பழம் பெரும் வனமாகிய அசோக வனம் நுவரெலியாவின் சீதா- எலிய எனும் இடத்தில் அமைந்துள்ளது.
எம்மில் பலருக்கு சீதை சிறை வைக்கப்பட்ட இடமாக மட்டுமே அசோக வனம் தெரியும்.
ஆனால் அதிசயங்களோடு சேர்த்து சில நம்ப முடியாத ஆச்சரியங்களையும் மர்மங்களையும் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கின்றது. இராவணன் சீதையை சிறை வைத்த இடத்தில் ஆலயம் எழுப்பப்படவில்லை.
இராவணன் சீதையை அசோக வனத்தின் மையப்பகுதியிலேயே சிறை வைத்திருக்கின்றான். அதனை சித்தரிப்பதாகவே கம்பரின் இராமாயணமும் அமைந்திருக்கின்றது.
ஆனால் பிற்காலத்தில் அனைத்து மக்களுக்கும் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என தற்போதைய சீதையம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமே சுட்டி காட்டப்பட்டிருக்கின்றது.
நாம் கூட சீதை அம்மா அடர்ந்த வனத்தினுள் சிறை வைக்கப்பட்டதாகவே படித்திருப்போம், கேள்வியுற்றிருப்போம். அப்படி அடர்ந்த வனத்தினுள் சீதை சிறை வைக்கப்பட்டிருந்தால் வனத்திற்கு வெளியில் எதற்கு கோவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் பல காலத்திற்கு முன்பே ஆராய்ச்சியாளர்களால் பல கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. உண்மையில் இராவணன் சீதையை சிறை வைத்தது வனத்தின் மையப்பகுதியிலே ஆகும்.
காரணம் அடர்ந்த வனத்திற்குள் பிரவேசிக்கும் போது இராவணனின் மாட மாளிகைகளின் இடி பாடுகள் காணப்படுகின்றன.
வனத்தின் இடை நடுவில் பாரிய பூந்தோட்டம் ஒன்று காணப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் அதன் வழியே சென்றால் மாத்திரமே சீதை சிறை வைக்கப்பட்ட உண்மையான இடத்தினை அறிந்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சீதை சிறை வைக்கப்பட்ட இடமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் வனத்தின் மையப்பகுதியிலே பாரிய மரமொன்று காணப்படுவது தெரிந்தாலும் அதனை நெருங்க விடாமல் பல உயிரினங்கள் இடையூறு விளைவிக்கின்றன.
நேரம் கடக்கும் போது வினோதமான ஒலிகளும், வினோதங்களும் இடம் பெறுகின்றன. சீதை சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் பிரதேசத்திற்கு செல்வது கடினம் என்று கூறப்படுகின்றது.
அங்கு நடப்பது என்ன? அனுமன் தீயிட்டு கொழுத்தியதாக கூறப்படும் வனப்பகுதி இன்று வரை அதே எரிந்துப் போன அடையாளங்களுடன் கருகிய நிலையிலேயே காணப்படுகின்றது.
சீதாதேவி கண்ணீர் வடித்தாக கூறப்படும் இடம் பள்ளமாகி நீர் நிரம்பி காணப்படுகின்றது.
அனுமன் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இன்றும் அழியாமல் பாத சுவடுகள் காணப்படுகின்றன. இது போல் பல்வேறு இரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்திருக்கின்றது அசோக வனம்.
கட்டாயம் இலங்கை சென்றால் இந்த மர்ம இடத்திற்கு சென்று பார்வையிட்டு வாருங்கள்.