இலங்கையில் சீதா தேவியை சிறைவைத்த இடம் பற்றி தெரியுமா?
சீதா எலியா கோவில் சீதா தேவி மூலவராக அமையப்பெற்றுள்ள கோவில் ஆகும்.
ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா தேவி அசோக வனத்தில் வைக்கப்பட்டிருந்தார், அந்த இடத்தையே தற்போது சீதா எலியா என்றழைக்கிறார்கள்.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், சுக்கலை தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த பகுதி மலை காடு சூழ இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காட்சியளிக்கிறது.
சீதா தேவி சிறை வைக்கப்பட்டிருந்த போது, மலைக்கு கீழே ஓடையில் வந்து நீராடினார் என கூறப்படுகிறது.
இவரின் கால் தடமும், அனுமனின் கால் தடமும் இங்குள்ள பாறைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி இராமாயணம் கதை இலங்கையில் நடந்ததை உறுதிப்படுத்தும் விதமாக பல தடங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு,