சிரிச்சிக்கிட்டே இருக்கணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
வாழ்க்கையில் எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அது நமது உடல் மற்றும் மனதை வெகுவாக பாதிக்கும்.
எனவே முடியுமானவரை கவலைகளை மறந்து சிரிக்க பழகுவோம். இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையிலும் எந்நேரமும் கவலையுடனே இருப்பதை விட்டு மகிழ்ச்சியாக இருக்க பழகுவோம்.
மகிழ்ச்சியை இழக்க வேண்டாம்
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் மகிழ்ச்சியின் பார்வையில் பார்க்க பழக வேண்டும்.
நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடும்போது அது நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அதிசயத்தையும் கொண்டுவரும்.
தொடர்பு கொள்ளுங்கள்
நாம் நெருங்கிய, முக்கிய நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்போது அது நமக்கு அன்றைய நாளுக்கான மகிழ்ச்சியை பெற்றுத்தரும். இது மகிழ்ச்சியின் உணர்வுகளையும் தூண்டிவிடும்.
image - CNN
இலகுவாக எடுத்துக்கொள்ளவும்
தேவையில்லாத மன உளைச்சலை தவிர்க்க, வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் மிக இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எமது சூழ்நிலைகள் எம்மை தேவையில்லாத விடயங்களை நினைத்து யோசிக்க வைக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் இலகுவாக கடந்து வர பழக வேண்டும்.
மகிழ்விக்கும் செயல்களை செய்யுங்கள்
குழந்தைகளுடன் விளையாடுதல், நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து சிரித்தல். என்பவை எப்பொழுதும் உங்களை மகழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
image - freepik