கொரியன், சைனீஸ் பெண்களின் அழகு மற்றும் கூந்தலின் ரகசியம்.... இந்தியாவில் இருக்கும் இந்த ஒரே ஒரு செடி தானாம்
கொரியன் மற்றும் சைனீஸ் பெண்கள் முகத்தினையும், முடியையும் அழகாக வைப்பதற்கு இந்த ஒரு செடி தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?. ஆம் இந்தியாவில் பொரும்பாலான வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் சிறிய செடி தான் பட்டன் ரோஸ். இது பல வண்ணங்களில் காணப்படுகின்றது.
பட்ரோஸ் செடியின் பயன்கள் முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளி இருப்பவர்கள் இந்த செடியில் வளரும் ரோஸ் கலர் பூவை எடுத்து மையாக அரைத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு பின்பு தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
இதனை வாரத்திற்கு 3 முறை செய்தால் சைனிஸ் பெண்களைப் போன்று கொள்ளை அழகில் ஜொலிக்கலாம். முடி நன்கு நீளமாக வளர்வதற்கு டேபிள் ரோஸின் தண்டு மற்றும் இலைகளை எடுத்துக்கொண்டு, பாதாம் ஆயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றில் கலந்து கொண்டு, முடியின் வேர்கால்கள் முதல் முனி முடி வரை நன்கு தேய்த்து, 35 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
ஏனெனில் டேபிள் ரோஸில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் முகத்தினையும், முடியையும் சீன பெண்கள் போன்று அழகு படுத்த அதிகம் பயன்படுத்தப்படுகின்றதாம்.