கொலைகார திமிங்கலத்திற்கு பயந்து வீதிக்கு வந்த கடற்சிங்கங்கள்... வைரலாகும் காட்சி
கால நிலை மாற்றம் ஏற்படும் தாக்கத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் உணவு பிரமிடின் மேல் மட்டத்தில் உள்ள உயிரினங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கடல்வாழ் உயிரினங்கள் சடலமாகவும் உயிருடனும் கரை ஒதுங்குவது வழக்கமாகி உள்ளது.
அந்த வகையில், சிலியில் கொலைக்கார திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கங்கள் கரை ஒதுங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பையோ பையோ என்ற இடத்தில், கடற்கரையோரம் திரியும் திமிங்கலங்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
இந்த திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு கரைஒதுங்கி உள்ள கடல் சிங்கங்கள் நகருக்குள் புகுந்து நாய்களுடன் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
More than 300 sea lions apparently escaping killer whales have taken over the beaches of Tome, a town in Chile’s Bio Bio region pic.twitter.com/MSm7C1vvno
— Reuters (@Reuters) June 24, 2021