வாரத்தில் 42 மணிநேரம் வேலை ஆனால் ஆண்டிற்கு சம்பளம் ரூ.1.5 கோடி அப்படி என்ன வேலை ?
உணவு தங்குமிடம் மற்றும் அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுக்கப்பட்டு வாரத்தில் 42 மணிநேரம் மருத்துவ வேலை செய்தால் சம்பளம் ரூ.1.5 கோடி ரூபாய் கொடுக்கப்படுகின்றது.
உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா
தீவுகள் என்றாலே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தீவுகளுக்கு மக்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதே போல தான் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன.
தற்போது அங்கு வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த இடத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும்.
அதன்படி மொத்தாமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.
இந்த வேலையில் பங்கு பெற நினைப்பவர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும்.
வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்கு ஒரு பாடசாலையும் நடைபெற்று வருகின்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த பள்ளியில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
அதிலும் 2 மாணவர்கள் நர்சரி வகுப்பில் உள்ளனர். அவர்களின் வயது 4. இந்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும்.