Viral Video: பாடசாலை மாணவனின் நெகிழ்ச்சியான செயல்: வைரலாகும் வீடியோ!
வலையில் சிக்கிய காகத்தை மீட்டு காப்பாற்றிய மாணவன் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
காகத்தை காப்பாற்றிய மாணவன்
பொதுவாகவே இணையத்தில் ஒரு சில வீடியோக்கள் மக்களை கவரும் வகையில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கும். இவ்வாறு இணையத்தில் பரவி வரும் ஒரு மனதைக் கவரும் வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அன்பு, பாசம், கருணை என்பது பல ஒரு மனிதனின் பாதி உயிராக இருக்கவேண்டும். இப்போது வைரலாகும் வீடியோவில், வலையில் சிக்கிய காகத்திற்கு சிறுவன் ஒருவன் உதவுவதைக் காணலாம்.
அவர் தனது பள்ளியில் இருக்கும் வலை ஒன்றில் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு பறவை அந்தப் பறவையை விடுவிக்க அந்த மாணவன் கடுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இறுதியில் சிறுவனால் வலையை அவிழ்த்து காகத்தை விடுவிக்க முடிந்தது. இவ்வாறு அந்த மாணவன் காகத்தை காப்பாற்றியதும் அவனுடைய வகுப்பு தோழர்கள் அந்த இடத்திற்கு வந்து மகிழ்ச்சியுடன் அவரைச் சூழ்ந்து அந்த மாணவனுக்கு கைதட்டி ஆராவாரம் செய்யவும் காகம் பறந்து சென்றது.
A compassionate heart touches countless lives.❤️? pic.twitter.com/93XKNckU0n
— Sabita Chanda (@itsmesabita) March 1, 2023
இந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சபிதா சந்தா ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி குறித்த மாணவனை பாராட்டி வருகின்றனர்.