சவுதி பாலைவனத்தில் அரிதான பனிப்பொழிவு - ஒட்டகங்களின் வைரல் காணொளி
சவுதி அரேபியா முழுவதும் வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக பாலைவன ஒட்டகங்கள் உறைபனி வெப்பநிலை மற்றும் வெள்ளை நிலப்பரப்புகளில் செல்ல சிரமப்படும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதிகளில், குறிப்பாக வடக்கு தபூக், ஹைல் போன்ற இடங்களில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிதான மற்றும் கனமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பாலைவன மலைகள் வெண்பனி போர்வையால் மூடப்பட்டுள்ளன, இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட ஒரு வியத்தகு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

வெப்பநிலை -4°C வரை குறைந்துள்ளதால், இப்பகுதிகளில் உறைபனி உருவாகவும் வாய்ப்புள்ளதாக சவூதி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த உறைந்த பனி பாலைவனத்தில் கொட்டுகிறது இது அங்கே வாழும் ஒட்டகங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பனி பொழிய பொழிய அது ஒட்டகங்கள் மேல் அப்படியே பொழிகிறது.
இந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் உலக அழிவு என கணிக்கபட்ட தீர்க்க தரிசனமா? இது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Snow blanketed Saudi Arabia this week, transforming the usually rugged, desert-framed mountains into a winter landscape.pic.twitter.com/0lMIazJe9b
— Massimo (@Rainmaker1973) December 19, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |